ஜெயலலிதா சொத்துகள்.. ஜெ.தீபா வழக்கு - பெங்களூரு கோர்ட் அதிரடி உத்தரவு

x

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கோரி ஜெ தீபா தரப்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா , சுதாகரன், இளவரசி ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட கோரி ஆர் டி ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்ததை அடுத்து , அவர்களது சொத்துக்களை ஏலம் விடும் பணி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மூலமாக மேற்கொள்ளப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ தங்க வெள்ளி வைர நகைகள் பெங்களூருவில் உள்ள அரசு கருவூலத்தில் இருப்பதாகவும், மீதி சொத்துக்கள் சென்னையில் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கோரி அவரது அண்ணன் மகள் ஜெ தீபா தரப்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாரிசு வகையில் உரிமை கோரியுள்ளதாக தீபா தரப்பு வழக்கறிஞர் சத்யகுமார் ஆஜராகி மனுதாக்கல் செய்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் மூன்றாம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்


Next Story

மேலும் செய்திகள்