"உயிருக்கு போராடிய ஜெயலலிதா.. மேல் தளத்தில் பிரியாணி.." - அடுத்தடுத்து பரபரப்பு கிளப்பும் அறிக்கை

x

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சமயத்தில், மருத்துவமனையின் மேல் தளத்தில் தங்கியிருந்தவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் அடுத்தடுத்து பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையின் இணைப்பில் பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மருத்துவமனையில் ஜெயலலிதா 2வது மாடியிலும், சசிகலாவின் உறவினர்கள் மேல் தளத்திலுள்ள 10 அறைகளில் தங்கியிருந்ததாகவும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது மேல் தளத்தில் பிரியாணி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்