ஜெ.வின் கட்டைவிரல் ரேகை உண்மை என்ன? - ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் தகவல்

x

இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெயலலிதாவின் கட்டைவிரல் ரேகையை பெற்றதில் முரண்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்ட விவகாரத்தில் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து விசாரித்திருக்கும் ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவின் கட்டைவிரல் ரேகையை பெற்றதில் முரண்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. முதலில் மாலை 6.30 மணிக்கு ரேகை பதியப்பட்டதாக மருத்துவமனை தொடர்பு அதிகாரி பாலாஜி கூறியதாகவும் பின்னர் அதனை 6 மணிக்கு ரேகை பதியப்பட்டதாக திருத்தம் செய்யப்பட்டது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் கைரேகை எடுக்க சுகாதாரத்துறை செயலாளரிடம் அனுமதி பெறப்பட்டதாக முதலில் கூறப்பட்டது, பின்னர் அதுவும் திருத்தம் செய்யப்பட்டது; கைரேகை எடுக்கும் போது, தலைமை செயலாளர் அல்லது முதல்வரின் தனிச்செயலாளர் இருக்க வேண்டும், ஆனால், அத்தகைய அனுமதி பெறப்படவில்லை.

ஜெயலலிதா கட்சி பொதுச்செயலாளராக இருப்பதால் ரேகையை பெற அனுமதி பெற அவசியமில்லை என தம்பித்துரை தெரிவித்தார். பொதுச்செயலாளராக இருந்ததால் ஜெயலலிதா கைரேகையை பதிவு செய்தது உறுதியாகிறது, இதில் விரிவான ஆய்வு தேவையற்றது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்