"நான் தான் ஜெயலிதாவின் அண்ணன்".. பகீர் கிளப்பிய திடீர் வாரிசு.. ஜெ.தீபா, ஜெ.தீபக்குக்கு சிக்கலா?

x
  • கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த என்.ஜி.வாசுதேவன் என்பவர், ஜெயலலிதாவின் சகோதரர் எனக் கூறி, அவரது சொத்தில் பங்கு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
  • அதில், தனது தந்தை ஜெயராமனின் 2ஆவது மனைவியின் மகளான ஜெயலலிதாவின் சொத்தில், தனக்கு 50 சதவீதம் பங்கு தர தீபா, தீபக்குக்கு உத்தரவிட வேண்டும் என கோரினார்.
  • காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்கலாமா?, வேண்டாமா? என்பது குறித்து பதில் அளிக்கும்படி தீபா, தீபக் ஆகியோருக்கு மாஸ்டர் நீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியது.
  • இருவரும் பதில் மனு தாக்கல் செய்யாததால், என்.ஜி.வாசுதேவனின் வழக்கை விசாரணைக்கு ஏற்று மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்