ஆடியோ உரிமத்தில் சாதித்த 'ஜவான்' படம்... 'இத்தனை' கோடிக்கு உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

x

ஷாருக்கானின் ஜவான் பட ஆடியோ உரிமம் மிக அதிக தொகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதன் ஆடியோ உரிமத்தை டி- சீரிஸ் நிறுவனம் 36 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது. குறிப்பாக இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகையை செலுத்தி இப்படத்தின் ஆடியோ உரிமையை அந்த நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு முன்னரே படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்