ஈட்டியெறிதல் போட்டி-சுவிட்சர்லாந்தில் மாஸ் காட்டிய நீரஜ் சோப்ரா | Neeraj Chopra | India

x

காயத்தில் இருந்து குணமடைந்த பிறகு லுசான் டயமண்ட் லீக் தொடரின் ஈட்டியெறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இதில் முதல் முயற்சியில் ஃபவுல் செய்த நீரஜ் சோப்ரா, 2வது முயற்சியில் 83 புள்ளி 52 மீட்டர் தூரத்துக்கும், 3வது முயற்சியில் 85 புள்ளி பூஜ்யம் நான்கு மீட்டர் தூரத்துக்கும் ஈட்டியெறிந்தார். தொடர்ந்து 5வது முயற்சியில் 87 புள்ளி 66 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியெறிந்து நீரஜ் சோப்ரா அசத்தினார். இந்த தூரத்தை மற்ற வீரர்களால் எட்ட முடியாமல்போன நிலையில், சாம்பியன் பட்டத்தை நீரஜ் சோப்ரா கைப்பற்றினார். 3வது முறையாக டயமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா வெற்றிவாகை சூடியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்