முதல்வரின் பயணம் குறித்து செய்தி வெளியிட்ட ஜப்பான் பத்திரிகை "நிக்கி"

x

முதல்வரின் ஜப்பான் பயணம் குறித்து ஜப்பானின் முன்னணி பத்திரிகையான நிக்கி செய்தி வெளியிட்டுள்ளது... அதில், திராவிடர் முன்னேற்ற கழகத்தின் தலைவரான ஸ்டாலின் 2021ல் இருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பதாகவும், ஜப்பான் வந்த அவர் டோக்கியோவில் ஜப்பான் நிறுவன தலைவர்கள் மத்தியில் பேசியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டதாகவும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் ஜப்பானிய நிறுவனங்களுக்கு திறமையான பணியாளர்களை தங்களால் வழங்க முடியும் என்று அவர் தெரிவித்ததாகவும் நிக்கி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்