"மாணவர்களுடன் இணைந்து ஜனகனமன பாடினார்"... ரவீந்திரநாத் தாகூர் தேசிய கீதத்தை பாடிய பள்ளி

x

"மாணவர்களுடன் இணைந்து ஜனகனமன பாடினார்"... ரவீந்திரநாத் தாகூர் தேசிய கீதத்தை பாடிய பள்ளி


இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ரவீந்திரநாத் தாக்கூரால் முதன் முதலாக தேசியக்கீதம் பாடப்பட்ட பள்ளி என்ற பெருமையை கோவையை சேர்ந்த சர்வஜன பள்ளி பெற்றுள்ளது. பீளமேடு பகுதியில் உள்ள சர்வஜன பள்ளியில் முதல் முதலாக ரவீந்திரநாத் தாகூரால் தேசிய கீதம் பாடப்பட்டது. 1926 ஆம் ஆண்டு கோவைக்கு வந்த ரவீந்திரநாத் தாகூர், சர்வஜன பள்ளியை பார்வையிட்டார். அப்பொழுது தன்னால் எழுதப்பட்ட ஜனகன மன பாடலை மாணவர்களுடன் இணைந்து பாடினார். அதன்பின்பு நாடு சுதந்திரம் அடைந்ததும், ரவீந்திரநாத் தாக்கூரால் பாடப்பட்ட ஜனகன மன பாடல், நாடெங்கும் தேசியக் கீதமாக ஒலிக்கப்பட்டது. இந்த நிலையில் சுதந்திரத்திற்கு முன்னதாக முதல்முதலாக தங்களது பள்ளியில் தேசிய கீதம் பாடப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்