ஆஹ் நண்பர்களே.. மதுரையில ஜல்லிக்கட்டு.. ஆன்லைன் புக்கிங் ஆரம்பிச்சிட்டாங்க..

x

ஆஹ் நண்பர்களே.. மதுரையில ஜல்லிக்கட்டு.. ஆன்லைன் புக்கிங் ஆரம்பிச்சிட்டாங்க..


மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறுகிறது.

அம்மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16 -ல் பாலமேட்டிலும் மற்றும்17ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முன் பதிவு இன்று தொடங்கி,12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், madurai.nic.in எனும் இணையதளம் வாயிலாக முன் பதிவு செய்ய வேண்டும் எனவும் ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். மேலும், மாடுபிடி வீரர்களுக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசி மற்றும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அவசியம் என்றும், காளைகள் 3-ல் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்