ஜல்லிக்கட்டு விவகாரம் நடத்தலாமா..? - ஆதரவாகவும், எதிராகவும் குரல் எழுப்பிய மக்கள்.. கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

x
  • திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் வாக்குவாதம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • பொங்கலூர் ஒன்றியம் அழகுமலை ஊராட்சி சிறப்பு கிராம சபா கூட்டம் வேலாயுதம்பாளையத்தில், அதன் தலைவர் தூய மணி தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
  • அழகுமலையில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிகளால் சுற்றுப்புற சுகாதாரம் சீர்கேடு அடைந்து விட்டதாகவும், விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி ஒரு தரப்பினர் முழக்கங்கள் எழுப்பினர்.
  • அப்போது மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிலர், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
  • அப்போது, அங்கிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர்.
  • பின்னர் பேசிய ஊராட்சி தலைவர் தூய மணி, ஜல்லிக்கட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், இது குறித்து மாவட்ட ஆட்சியர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும், இதுவரை அறிவிப்பு வராததால் போட்டி நடைபெற வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்