ஜல் ஜீவன் மிஷன் திட்டம் - சாதனை படைத்த ராணிப்பேட்டை மாவட்டம்

x

தேசிய அளவில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் 3-வது இடம் பிடித்து சாதனை படைத்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் புதிய குடிநீர் இணைப்புகளை வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் தேசிய அளவில் 3-ஆம் இடம் பிடித்துள்ளது. இதையொட்டி, புதுடில்லி ஜல்ஜீவன் மிஷன் திட்ட தலைமை அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்