ஜெயிலில் அமைச்சருக்கு சொகுசாக பெட் சரிபண்ணி கொடுக்கும் பணியாளர்கள்-வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

x

திகார் சிறையில் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இருந்த அறையை பணியாள் சுத்தம் செய்து, வசதி ஏற்படுத்தி தரும் வீடியோ வெளியாகியுள்ளது. பண மோசடி வழக்கில் திகார் சிறையில் உள்ள ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்த வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இந்த நிலையில், சத்யேந்தர் ஜெயின் இருந்த அறையை பணியாள் ஒருவர் சுத்தம் செய்து, அவருக்கு தேவையான பொருட்களை வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. குற்றவழக்கில் கைதான அமைச்சர், சிறை அறையில் விருந்தினரை போல் நடத்தப்பட்டத்தை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்