கொலை முயற்சி வழக்கில் எம்.பி.. 4 பேருக்கு கிடைத்த சிறை தீர்ப்பு..! | Lakshadweep

x

கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு எம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லட்சத்தீவு எம்பியாக இருக்கும் முகமது பைசல் என்பவர் 2009ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் பி.எம். சயீத்தின் மருமகன் பாடாநாத் சாலிக்கை தாக்கியதாக குறப்படுகிறது. இது தொடர்பாக, முகமது பைசல் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் மீதான தீர்ப் பில், எம்பி முகமது பைசல் உள்ளிட்ட 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த முகமது பைசல், மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்