"ஜெய் அகோர காளி..!"நடு இரவில் சங்கு ஊதி அகோரிகள் பூஜை
திருச்சி அரியமங்கலத்தில் உள்ள ஜெய் அகோரகாளி கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு அகோரிகள் நள்ளிரவில் நவதானியங்கள், பழவகைகள் ஆகியவற்றை அக்னி குண்டத்தில் இட்டு மஹா ஹோமம் நடத்தினர். ஜெய் அகோர காளி, ஜெய் அஷ்ட காலபைரவர் மற்றும் அங்குள்ள ஏனைய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. நள்ளிரவில் நடைபெற்ற அகோரிகளின் யாக பூஜையின்போது மேளம் அடித்தும் சங்குமுழங்கியும், ஹரஹர மகாதேவ் என கோஷமிட்டனர். இதில் அகோரிகள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு காளியை வழிபட்டு சென்றனர்.
Next Story
