"10, 12-ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி அளித்தால் ஜாக்பாட்"- பெங்களூரு மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு

x

பெங்களூருவில் மாநகராட்சி பள்ளிகளில்10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில்100 சதவீதம் தேர்ச்சி அளித்தால், அப்பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கனவுப் பள்ளி என்ற புதிய‌ திட்டத்தின்கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து, தேர்ச்சி இலக்கு100 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் கீழ் இயங்கும் 164 பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில்100 சதவீத தேர்ச்சி அளித்தால் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாநகராட்சி எடுத்துள்ள இந்த நடவடிக்கை, ஆசிரியர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்