கொள்ளையனுக்கு அடித்த ஜாக்பாட்! ,செட்டில் ஆகும் நேரத்தில் புது ட்விஸ்ட்.. | Madurai

மதுரையில், வீடுகளில் கொள்ளை அடித்த பணத்தில், விவசாய நிலம் வாங்கி செட்டில் ஆன கொள்ளையனை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள ரவீந்திரன் என்பவரின் வீட்டில் இருந்து 58 சவரன் தங்க நகைகள், ஒன்பதரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் இரட்டைக்குழல் துப்பாக்கி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில், போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெஞ்சமின் என்பவரை, போலீசார் கைது செய்து விசாரித்தபோது, அவர் மீது ஏற்கனவே 20 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனிடையே, பெஞ்சமின் திருடிச் சென்ற தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை விற்பனை செய்து, அந்த பணத்தில் திருநெல்வேலி ராதாபுரத்தில் சுமார் இரண்டரை ஏக்கர் விவசாய நிலம் வாங்கியது விசாரணையில் கண்டறியப்பட்டது. அந்த நிலத்தின் பத்திரத்தை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், 20 கிராம் எடையுள்ள நவரத்தின மோதிரம், 8 கிராம் எடையுள்ள பச்சைக்கல் மோதிரம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com