ஜே.பி.நட்டாவுக்கு கல்லறை எழுப்பி பூக்கள் தூவிய மர்ம நபர்கள் - தெலங்கானாவில் பரபரப்பு சம்பவம்

x

முனுகோடே எனும் பகுதியில் சாலையில் நடுவில் குழி தோண்டி கல்லறை எழுப்பிய மர்ம நபர்கள் அதன் மீது பூக்கள் தூவி ஜே.பி.நட்டாவின் படத்தை அங்கு வைத்துள்ளனர்.

உயிருடன் இருக்கும் போதே ஜீ பி நட்டாவுக்கு கல்லறை அமைத்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தெலங்கானா பாஜகவினர், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர ஸமிதியை விமர்சித்துள்ளது.

கல்லறையின் மீது ஃப்ளூரைடு குறைப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற பெயரும் இடம் பெற்றுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சராக நட்டா இருந்த போது தெலங்கானாவில் ஃப்ளூரைடு குறைப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்ததாகவும், இன்று வரை அது நிறைவேற்றப்படாததால் அதை அவருக்கு நினைவுபடுத்தும் வண்ணம் மர்ம நபர்கள் சிலர் இந்த செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து எந்த விதமான புகாரும் அளிக்கப்படாத போதும் காவல் துறையினர் இந்த கல்லறையை அகற்றியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்