"நினைவாற்றலை இழந்துவிட்டேன்" - நடிகை பானுப்பிரியா சொன்ன ஷாக் தகவல்

x

பிரபல நடிகை பானுப்பிரியா நினைவாற்றலை இழந்துவிட்டதாகக் கூறி இருப்பது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 80, 90களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் பானுப்பிரியா..... இந்நிலையில் பேட்டி ஒன்றில், தான் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டு உள்ளதாக பானுப்பிரியா கூறி உள்ளார். சமீப காலமாக தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், கற்றுக்கொண்ட சில விஷயங்களை மறந்துவிட்டதாகவும் அவர் கூறி உள்ளார். படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது வசனங்ளைக் கூட சரியாக பேசாமல் மறந்துவிட்டதாகவும் பானுப்பிரியா கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்