"நாயகன் மீண்டும் வரஎட்டுத்திக்கும் பயம்தானே" - டேவிட் வார்னர் சாதனையால் அரண்ட தென் ஆப்பிரிக்கா

x

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வலுவான நிலையில் உள்ளது.

மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தை 45 ரன்களுடன் ஆஸ்திரேலியா இன்று தொடங்கியது. நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னரும், ஸ்டீவ் ஸ்மித்தும் ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை உயர்த்தினர். தனது 100வது டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய வார்னர், சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசினார். சதமடித்த பிறகும் ஆதிக்கம் செலுத்திய அவர், 254 பந்தில் இரட்டை சதம் அடித்து, ரிட்டயர்டு ஹர்ட் (retired hurt)ஆனார். ஸ்டீவன் ஸ்மித் 85 ரன்களில் ஆட்டமிழக்க, 2ம் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் ஆஸ்திரேலியா 197 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது. டிராவிஸ் ஹெட் 48 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்