சென்னை தாம்பரத்தில் இருசக்கர வாகனத்தில் வலம் வந்து கொள்ளையில் ஈடுபட்ட இளம் ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மின்மோட்டாரை தம்பதி திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, பீர்க்கன்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.