"தோனியிடம் தோற்றது மகிழ்ச்சி தான்" - CSK இதயங்களை வென்ற 'பாசமலர்' பாண்டியா

x

நான் தோற்பதாக இருந்தால் தோனியிடம் தோற்பது மகிழ்ச்சிதான் என ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. தோல்விக்கு பிறகு பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தோனிக்காக மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். தோனி வெற்றி பெற வேண்டுமென ஏற்கனவே விதிக்கப்பட்டதாக கூறிய அவர், தான் தோற்க வேண்டியிருந்தால் தோனியிடம் தோற்பது மகிழ்ச்சிதான் எனவும் தெரிவித்தார். நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும் என கூறிய ஹர்திக் பாண்டியா, தனக்கு தெரிந்த சிறந்த மனிதர்களுள் ஒருவர் தோனி என நெகிழ்ச்சியாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்