"வீட்டுக்கு செல்லவே 1 மணி நேரம் படகு பயணம்..." காவிரி வெள்ளத்தால் தனிதீவான கிராமம்

x

கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 53 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சிதம்பரம் அருகேயுள்ள ஜெயங்கொண்ட பட்டினம் கிராமம் தனித்தீவாக மாறியுள்ளது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் கிராமமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஒரு மணிநேரம் படகில் பயணித்தே வீட்டிற்கு செல்ல வேண்டியுள்ளதாகவும், ஒருவாரத்திற்கு மேலாக இதே நிலை நீடிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் வீடுகளில் நுழைவதால் அச்சத்தோடு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்