ஜமீஷா முபீன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள்; - போலீசிடம் மனைவி சொன்ன தகவல்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமீஷா முபீனின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் நாட்டு மருந்து என்றும் அதை தேனுடன் கலந்து விற்க போவதாக தன் மனைவியிடம் அவர் தெரிவித்ததாக காவல்துறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
x

இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்று தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரும், போலீசாரும் சந்தேகம் தெரிவித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூபின் வீட்டில் இருந்து கைப்பற்றபட்ட பொருட்களும் இதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. முபீன் மனைவி அஸ்ரத் ஒரு காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி ஆவார். தற்போது அவர் தனது பெற்றோர் வீட்டில் இருந்து வருகின்றார். திருமணமாகி 5 வருடங்கள் ஆகி விட்டதாகவும் இப்போது இருக்கும் வீட்டிற்கு சென்று ஓன்றரை மாதங்கள் தான் ஆவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற நாளுக்கு முந்தைய வெள்ளி கிழமை மதியம் சாப்பிட்டு் விட்டு மனைவி, குழந்தைகளை சந்தித்து சென்றவர், அதன் பின்னர் வரவே இல்லை எனவும் கூறப்படுகிறது. அதேபோல் வீட்டில் இருந்த பெட்டிகளில் நாட்டு மருந்துகள் இருப்பதாகவும், அதை தேனுடன் சேர்த்து விற்கப்போவதாகவும் அவர் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்... நிறைய புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்ட முபீன், 2019ல் NIA அவரிடம் விசாரணை செய்த பின்பு தனது குடும்பத்துடன் பெரிய அளவில் தொடர்பு இல்லாமல் இருந்துள்ளார்... மேலும் அண்மையில் ஒரு மாதத்திற்கு முன்பு தான் அவர் கார் ஒட்டி பழகியது கண்டறியப்பட்டுள்ளது.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமீஷா முபீனின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் நாட்டு மருந்து என்றும் அதை தேனுடன் கலந்து விற்க போவதாக தன் மனைவியிடம் அவர் தெரிவித்ததாக காவல்துறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்