இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர்..அரையிறுதிக்கு சிட்ஸிபாஸ் முன்னேற்றம்

x

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு கிரீஸைச் சேர்ந்த முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், குரோஷியா வீரர் போர்னா கோரிக்-ஐ 6க்கு 3, 6க்கு 4 என்ற செட் கணக்கில் சிட்ஸிபாஸ் வீழ்த்தினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரர் மெத்வதேவ் உடன் சிட்ஸிபாஸ் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்