6 மணி நேரமாக வீட்டிற்குள்ளே IT ரெய்டு... வெளியே மோர், மில்க் ஷேக்... ஒரு பக்கம் ரெய்டு - மறுபக்கம் சுட சுட பிரியாணி

x

கோவையில் திமுகவை சேர்ந்த செந்தில் கார்த்திகேயன் என்பவரது வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த திமுக தொண்டர்கள் அவரது வீட்டு முன் திரண்டு அங்கேயே காத்திருக்கின்றனர். 6 மணி நேரத்துக்கு மேலாக வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வீட்டுக்கு வெளியே காத்திருக்கும் தொண்டர்களின் வசதிக்காக சேர்கள், பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. இடையில் கோடை வெப்பத்தை தணிக்க மோர் மற்றும் மில்க் ஷேக் வழங்கப்பட்டது. தொடர்ந்து மதிய உணவாக சுடச்சுட வெஜ் பிரியாணி பொட்டலங்களுடன் தயிர் பச்சடி பரிமாறப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்