மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பெண் சாமியார் - அருள்வாக்கு ஜெயந்தி அம்மா வந்திருப்பதாக பேச்சு

x

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அருள் வாக்கு ஜெயந்தி அம்மா என்ற பெயரில் வந்த பெண் சாமியார், அருள் வாக்கு கூறிய சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மின்சார வாரிய அதிகாரிகள் லஞ்சப் பணத்தை பிரித்துக் கொள்வதாகவும், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்க வந்ததாகவும் அவர் கூறினார். தன்னைப் பற்றி தெரிய வேண்டும் என்றால் அருள் வாக்கு அம்மா டாட் காம் என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் கூறினார். காவலர்கள் கேட்டுக் கொண்டதால், அங்கிருந்து அவர் வெளியேறினார்.


Next Story

மேலும் செய்திகள்