மனைவி உயிரை காப்பாற்ற நினைத்து கணவன் உயிரும் பறிபோன பரிதாபம் - எமனான தீபாவளி லீவ்

x

நாகர்கோவில் அருகே ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த சியாம், சென்னையில் உள்ள ஐடி-யில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் நாகர்கோவிலை சேர்ந்த சுஷ்மா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள காளிகேசம் மலைப்பகுதி ஆற்றிற்கு குளிக்க சென்றுள்ளனர். குளித்து கொண்டிருக்கும் போது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தன் மனைவியை காப்பாற்ற முயன்ற ஷியாம் எதிர்பாராத விதமாக ஆற்றில் முழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்