இரவோடு இரவாக வெடித்து தள்ளிய மக்கள்.. புகைமண்டலமாக காட்சியளித்த சென்னை

x

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் அதிகாலை முதலே பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

மாலையில் நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கையால் சென்னை நகரமே வண்ணமயமாக காட்சி அளித்தது.

சில இடங்களில் பொதுமக்கள் தொடர்ச்சியாக பட்டாசுகளை வெடித்து வந்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புகைமண்டலமாக காட்சி அளித்தது.

இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

சென்னையில் காற்றின் மாசு அளவு மோசமான நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்