இஸ்ரோவின் PSLV-C54 ராக்கெட் - இன்று 11.56 மணிக்கு விண்ணில் சீறிப் பாய்கிறது | pslv c54 | isro

x

இஸ்ரோ சார்பில் உருவாக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி54 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, இன்று காலை 11.56 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி54 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஓசன்சாட்-3 செயற்கைக் கோள் மற்றும் இந்தியா - பூடான் இணைந்து தயாரித்த நானோ செயற்கைக் கோள்கள், அமெரிக்காவின் நானோ செயற்கைக் கோள்கள் என மொத்தம் 8 நானோ செயற்கைக்கோள்களையும் இந்த ராக்கெட் சுமந்து செல்ல உள்ளது. ஓசன்சாட் செயற்கைக் கோள் மூலம் பூமி மற்றும் நீர்வளங்களை கண்காணிக்க முடியும் என்றும், கடலின் வெப்பநிலையை அறிய முடியும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்