"கப்பல் மாதிரி வீடு இல்ல? வீடே கப்பல் தான்" டைட்டானிக் கப்பல் வடிவில் கனவு இல்லம்..! சொந்த உழைப்பில் அசத்திய தொழிலாளி...

x

மேற்கு வங்கத்தில், டைடானிக் கப்பலை போன்ற வீடு ஒன்றை தன் சொந்த உழைப்பில் கட்டி வருகிறார் மின்டு ராய்.

1912இல் அட்லான்டிக் பெருங்கடலில், ஆயிரத்து ஐநூறு பேருடன் மூழ்கிய பிரம்மாண்டமான பயணிகள் கப்பல் டைடானிக் பற்றி, 1997இல் வெளியான டைடானிக் படம் உலகெங்கும் ஹிட்டானது. இந்த படத்தினால் உந்தப்பட்டு,

டைடானிக் கப்பலைப் போல ஒரு வீடு கட்ட விரும்பினார் மேற்கு வங்கத்தை சேர்ந்த மின்டு ராய். கொல்கொத்தாவில் இருந்து 25 வருடங்களுக்கு முன்பு சிலிகுரியின் ஃபாசிதவா என்ற ஊருக்கு புலம் பெயர்ந்த மின்டு ராய், அங்கு விவசாயம் செய்யத் தொடங்கினார். டைடானிக் படத்தை பார்த்த பின், 2010இல் 435 சதுர அடியில் டைடானிக் கப்பல் வடிவில் வீடு கட்டத் தொடங்கினார். பணப் பற்றாகுறையினால், கட்டுமானத் தொழிலாளர்கள் யாரும் இல்லாமல், தானே வீடு கட்டத் தொடங்கினார். இதற்காக கொத்தனார் வேலையை கற்றுத் தேர்ந்தார். இதுவரை 15 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ள மின்டூ ராய், டைடானிக் வீட்டை தொடர்ந்து கட்டி வருகிறார். அடுத்த ஆண்டிற்குள் இதை கட்டி முடித்து, இதன் மேல் தளத்தில் ஒரு உணவு விடுதியை தொடங்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்