சுப்ரீம் கோர்ட்டில் ஈஷா அறக்கட்டளை கேவியட் மனு

x

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு கோவை ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் தங்களது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என தெரிவித்து கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் கேவியட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்