"ஈஷா-ல செல்பி எடுத்துகிட்டே இருந்தாங்க"கார் ஓட்டுநர் சொன்ன பரபரப்பு தகவல்

x

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு குற்றவாளி முகமது ஷாரிக்கை, கடந்த மாதம் 24-ஆம் தேதி, கோவை ஈஷா யோகா மையத்தில் பார்த்ததாக வாடகை கார் ஓட்டுனர் கூறியுள்ளார்.

கோவை, செட்டிபாளையத்தைச் சேர்ந்த ஆனந்த், வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த மாதம் 24-ஆம் தேதி, தீபாவளி தினத்தன்று ஈஷா யோகா மையத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு, அங்கு மங்களூர் குண்டு வெடிப்புச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி முகமது சாதிக் சாரிக்கை பார்த்ததாகவும், முகமது ஷாரிக்கும், உடன் வந்த இருவரும் ஆதியோகி சிலை முன்பு செல்பி எடுத்துச் சென்றதாகவும் ஆனந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து, கோவை போலீசார், அவரிடம் விசாரித்துவிட்டுச் சென்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்