மாமல்லபுரம் சின்னங்களில் கதிர்வீச்சு தாக்கம் உள்ளதா? - விஞ்ஞானிகள் ஆய்வு

x

மாமல்லபுரத்தில், ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் வருகையை முன்னிட்டு, அங்குள்ள சின்னங்களில் கதிர்வீச்சு தாக்கம் உள்ளதா என அணுமின் நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 2ஆம் தேதி சென்னையில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள், பிப்ரவரி 1ஆம் தேதி மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க உள்ளனர்.

இந்நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் உற்பத்தி பிரிவு மாமல்லபுரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளதால், மாமல்லபுரத்தில் கதிர்வீச்சு அபாயம் உள்ளதா என்பதை அணுமின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்