40 கி.மீ வேகத்திற்கு மேல் சென்றால் அபராதம் விதிக்கப்படுமா? - சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கம்

x

சென்னை நகரத்திற்குள் பகல் நேரத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்துக்குள்ளும் இரவு நேரத்தில் 50 கிலோமீட்டர் வேகத்திற்குள்ளும் அனைத்து வகையான வாகனங்கள் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை கடந்தால், ஸ்பீட் ரேடார் கன் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்த நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் விளக்க கடிதம் பதிவிட்டுள்ளது. அதில் தற்போதைக்கு ரேடார் கன் வாகனங்களின் வேகம் குறித்த டேட்டா எடுப்பதற்கு மட்டுமே பதிவு செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதி முடிவு வரும் வரை இந்த ரேடார் கன் மூலம் அபராதம் விதிக்கப்படாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்