சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் தாமதமா? - அதிகாரிகள் சொன்ன தகவல்

x

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரிய பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில், பலர் தனியார் பால் பண்ணைகளுக்கு கூடுதல் விலைக்கு பாலை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இதனால் ஆவினுக்கு பால் வரத்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை சோழிங்கநல்லூர், அம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஆவின் பால் பண்ணைகளில் பால் வினியோகத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு பால் தேவை 29 லட்சம் லிட்டராக உள்ள நிலையில குறைந்தது ஒரு நாளைக்கு 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்தால்தான் 29 லட்சம் லிட்டர் பால் தாமதம் இல்லாமல் வினியோகிக்க முடியும் என முகவர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று பல இடங்களில் காலை 9 மணி வரை பால் கிடைக்கவில்லை என புகார்கள் எழுந்தன. இந்நிலையில் இன்று காலை முதல் ஆவின் பால் வினியோகம் சீராக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவின் பால் தட்டுப்பாடு என எதுவும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ள அதிகாரிகள், சில இடங்களில் ஆவின் பால் குறிப்பிட்ட நேரத்தில் வினியோகம் செய்யப்படவில்லை என புகார்கள் வந்தது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்