"குடியரசுத் தலைவர் அவமானப்படுத்தப்படுகிறாரா ..?" - முரசொலி பரபரப்பு கேள்வி

x

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை, மத்திய அரசு அழைக்காததைக் கண்டித்து, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் தலையங்கம் வெளியாகி உள்ளது.

அதில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவர், ஒரு குடியரசு நாட்டின் நாடாளுமன்றத்தை திறந்து வைக்கும் தகுதியை இழந்துவிட்டாரா என கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. பழங்குடி சமூகத்தில் பிறந்தவர் என்பதால், பெண் என்பதால், குடியரசுத் தலைவர் அவமானப்படுத்தப்படுகிறாரா என்றும் முரசொலி கேள்வி எழுப்பி உள்ளது. சிறப்பு அதிகாரங்கள் கொண்ட குடியரசுத் தலைவர் அவமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும், இது இந்திய அரசியலமைப்புக்கு ஏற்பட்ட அவமானம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படாதது, பாஜகவின் சனாதன சர்வாதிகாரத்தையும் காட்டுவதாக தலையங்கத்தில் காட்டமாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்