தோழி கொடுத்த ஜூஸில் விஷமா..? - அதிரவைத்த வாட்ஸ்அப் மெசெஜ் - கல்லூரி மாணவன் மரணத்தில் திருப்பம்

x

தோழி கொடுத்த ஜூஸில் விஷமா..? - அதிரவைத்த வாட்ஸ்அப் மெசெஜ் - கல்லூரி மாணவன் மரணத்தில் திருப்பம்

குமரி அருகே, தோழி கொடுத்த குளிர்பானத்தால் கல்லூரி மாணவன் இறந்த‌தாக கூறப்படும் வழக்கை குற்றப் பிரிவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக எல்லையோரம் கேரள மாநிலத்திற்குட்பட்ட பாறசாலையை சேர்ந்த ஷாரோன் ராஜ் என்ற மாணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு தோழி அளித்த குளிர்பானம் தான் காரணம் என பெற்றோர் புகார் அளித்த‌தால், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கை மாவட்ட குற்ற பிரிவுக்கு மாற்றி தனிக்குழு அமைத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. மேலும், உடலில் விஷம் கலந்துள்ளதா என்பதை கண்டறிய, சிறப்பு மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. குளிர்பானம் குடிப்பதற்கு முன்பே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த 13ஆம் தேதி தோழிக்கு அனுப்பிய வாட்ஸ் அப் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே, தேவைப்பட்டால், தமிழக போலீசாரின் உதவியை நாடவும் முடிவு செய்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் ஷில்பா கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்