ஐபிஎல் பரிசை மிஞ்சியதா? டெஸ்ட் சாம்பியன்ஷிப்... ஃபைனல் வின்னருக்கான பரிசு தொகை எவ்ளோ தெரியுமா? - வெளியான அறிவிப்பு

x

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசு தொகையை ஐசிசி வெளியிட்டு உள்ளது. அடுத்த மாதம் 7ம் தேதி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான மொத்த பரிசுத் தொகை சுமார் 31 கோடி ரூபாய் என ஐசிசி தெரிவித்து உள்ளது. சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு, சுமார் 13 கோடி ரூபாயும், 2ம் இடம் பிடிப்பவர்களுக்கு சுமார் ஆறரை கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளது. புள்ளிப்பட்டியலுக்கு ஏற்ப மற்ற அணிகளுக்கு பரிசுத் தொகை பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்