குறையும் டீசல் கார்களின் மவுசு.. இந்தியாவில் முடிகிறதா சகாப்தம்? - அதிர்ச்சியூட்டும் 'ரியல்' ரிப்போர்ட்
இந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் வெகுவாக சரிந்துள்ளதாக மத்திய அரசின் தரவுகள் கூறுகிறது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, டீசல் கார்கள் விற்பனை அளவு பெட்ரோல் கார்கள் விற்பனையைவிட அதிகமாக இருந்து வந்தது. தற்போது நிலமை தலைகீழாக மாறியுள்ளது.
2014ல் இந்தியாவில் விற்பனையான மொத்த கார்களில் டீசல் கார்களின் விகிதம் 48 சதவீதமாகவும், பெட்ரோல் கார்களின் விகிதம் 44 சதவீதமாகவும், இதர ரக கார்களின் விகிதம் 8 சதவீதமாகவும் இருந்தது.
2015ல் டீசல் கார்கள் விகிதம் 44 சதவீதமாக சரிந்தது. பெட்ரோல் கார்கள் விகிதம் 49 சதவீதமாக உயர்ந்தது. இதர ரக கார்கள் விகிகம் 7 சதவீதமாக இருந்தது.
2016ல் டீசல் கார்கள் விகிதம் 39 சதவீதமாகவும், பெட்ரோல் கார்கள் விகிதம் 53 சதவீதமாகவும், இதர ரக கார்களின் விகிதம் 8 சதவீதமாகவும் இருந்தது.
2017ல் டீசல் கார்கள் விகிதம் 36 சதவீதமாகவும், பெட்ரோல் கார்கள் விகிதம் 55 சதவீதமாகவும், இதர ரக கார்களின் விகிதம் 9 சதவீதமாகவும் இருந்தது.
2018ல் டீசல் கார்கள் விகிதம் 35 சதவீதமாகவும், பெட்ரோல் கார்கள் விகிதம் 56 சதவீதமாகவும், இதர ரக கார்களின் விகிதம் 9 சதவீதமாகவும் இருந்தது.
2019ல் டீசல் கார்கள் விகிதம் 31 சதவீதமாகவும், பெட்ரோல் கார்கள் விகிதம் 58 சதவீதமாகவும், இதர ரக கார்களின் விகிதம் 11 சதவீதமாகவும் இருந்தது.
2020ல் டீசல் கார்கள் விகிதம் 20 சதவீதமாகவும், பெட்ரோல் கார்கள் விகிதம் 70 சதவீதமாகவும், இதர ரக கார்களின் விகிதம் 10 சதவீதமாகவும் இருந்தது.
2021ல் டீசல் கார்கள் விகிதம் 18 சதவீதமாகவும், பெட்ரோல் கார்கள் விகிதம் 70 சதவீதமாகவும், இதர ரக கார்களின் விகிதம் 12 சதவீதமாகவும் இருந்தது.
2022ல் டீசல் கார்கள் விகிதம் 19 சதவீதமாகவும், பெட்ரோல் கார்கள் விகிதம் 64 சதவீதமாகவும், இதர ரக கார்களின் விகிதம் 16 சதவீதமாகவும் இருந்தது.
2023ல் இதுவரை, மொத்த விற்பனையில் டீசல் கார்கள் விகிதம் 18 சதவீதமாகவும், பெட்ரோல் கார்கள் விகிதம் 61 சதவீதமாகவும், இதர ரக கார்களின் விகிதம் 19 சதவீதமாகவும் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து பெட்ரோல் விலையை நெருங்கிவிட்டது. மேலும் டீசல் கார்களை விட பெட்ரோல் கார் கூடுதல் மைலேஜ் கொடுப்பதோடு, செளகரியமாக இருப்பதால் டீசல் கார் மீதான மக்களின் ஈர்ப்பு குறைந்துள்ளது. தவிர பசுமை வாகனங்களின் வரவும் டீசல் கார்களின் வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளது.
