கமலின் நிஜப்பெயர் பார்த்தசாரதியா? "ஆம்" என்று தலை ஆட்டிய கமல்

தனக்கு பார்த்தசாரதி என்று பெயர் இருந்த‌து என்பதெல்லாம் வதந்தி என நடிகர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.

மறைந்த நடிகர் கிரேஸி மோகனின் 70வது பிறந்த நாளையொட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று, நடிகர் மவுலி, இசைக்கவி ரமணன், பார்த்தசாரதி ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார். தொடர்ந்து CADD சென்டரின் உரிமையாளர் பார்த்தசாரதி பேசியபோது, கமலஹாசனின் தந்தை தாய் வைத்த உண்மையான பெயர் பார்த்தசாரதி என்று கூறினார். அப்போது, மேடையில் இருந்தவர்கள் உண்மையா என்று கேட்டபோது, கமல்ஹாசனும் ஆம் என்று தலையாட்டினார். ஆனால், மேடையில் பின்னர் பேசிய கமல்ஹாசன், தனக்கு பார்த்தசாரதி என்ற ஒரு பெயர் உண்டு என்பது வதந்தி என்றார். பிடித்தவர்களுக்காக பார்த்தசாரதியாகவே இருந்துவிட்டு போகிறேன் என்றார்.  

X

Thanthi TV
www.thanthitv.com