சாமி சிலையை தொட்டது குற்றமா? - பட்டியலின சிறுவனை கருவறை வரை.. ஆட்சியர் செய்த தரமான சம்பவம்

x

கர்நாடகாவில் சாமி சிலையைத் தொட்டதற்காக அபராதம் விதிக்கப்பட்ட சம்பவத்தில், அந்த சிறுவனின் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் அழைத்துச் சென்று வழிபடச் செய்துள்ளார். கோலார் மாவட்டத்தில் உள்ள ஹுல்லேரஹள்ளி கிராமத்தில் கோவிலில், சாமி சிலையை பட்டியலின சிறுவன் தொட்டதற்காக, பஞ்சாயத்து மூலமாக 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் வேதனை அடைந்த சிறுவனின் தாயார், வீட்டில் இருந்த சாமி படங்களை அகற்றி விட்டு, அதற்கு பதிலாக அம்பேத்கர், விவேகானந்தரின் படங்களை வைத்தார். இதையடுத்து, மாவட்ட காவல் துறை எஸ்.பி., மாநில மனித உரிமைகள் ஆணையர் ஆகியோருடன் சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தார். பின்னர், அவரே கோவிலின் பூட்டுகளை உடைத்து, அந்த சிறுவனின் குடும்பத்தினரை கோவில் கருவறை வரை அழைத்துச் சென்று வணங்கச் செய்தார். தெய்வங்கள் அனைவருக்கும் பொதுவானது என்று கிராம மக்களுக்கு அறிவுரை கூறி விட்டு அவர் திரும்பிச் சென்றர்.


Next Story

மேலும் செய்திகள்