கருப்பை நீக்க அறுவை சிகிச்சை.. இந்தியாவில் தேவையின்றி செய்யப்படுகிறதா..? காப்பீடுதான் காரணமா?

x

கருப்பை நீக்கம்... மருத்துவரீதியாக பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு, கருப்பை இறக்கம், புற்றுநோய் சிகிச்சைக்காக செய்யப்படும் ஒரு சிகிச்சை... இப்போது சிகிச்சைக்கான நோக்கம் தடம் மாறுகிறதா...? என்ற கேள்வி இந்தியாவில் எழுந்துள்ளது. வாடகை தாய் முறையில் ஏழை பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு, கருப்பை நீக்கத்திலும் எழுகிறது. மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பீட் பகுதியில் ஆரோக்கியமான பெண்களுக்கு அதிகப்பட்சமாக கருப்பை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது என வெளியான தகவல் நாட்டையே உலுக்கியது. அதற்கு சொல்லப்பட்ட காரணமும் குலைநடுங்க செய்தது. கரும்பு தோட்டங்களில் வேலை பார்க்க மாதவிடாயை ஒப்பந்ததாரர்கள் தடையாக பார்த்ததால் பெண்கள் கருப்பையை நீக்கியதாக தகவல் வெளியாகியது.

அப்பகுதியில் பல கிராமங்கள் கருப்பையற்ற பெண்களை கொண்ட கிராமங்களாக உள்ளது என ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். வளர்ந்த நாடுகளில் பொதுவாக 45 வயதுக்கு மேல் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மட்டுமே கருப்பை நீக்கம் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 28 வயதிலேயே பெண்களிடம் கருப்பை அகற்றம் விகிதம் தொடர்ந்து அதிகரித்திருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. இதில் மற்றொரு கொடூரமாக மத்திய அரசின் காப்பீட்டு தொகைக்காக ஆரோக்கியமான

பெண்களுக்கு கருப்பை நீக்கம் செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து டாக்டர் நரேந்திர குப்தா என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பீகார், சத்தீஷ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் கருப்பை அகற்றும் சிகிச்சைக்கு உட்படுத்தக் கூடாத மற்றும் மாற்று சிகிச்சை அளிக்கக்கூடிய பெண்களுக்கு கருப்பை நீக்கம் செய்யப்பட்டிருபதாக தெரிவித்தார். ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா மற்றும் பிற அரசு சுகாதார திட்டங்களில் கருப்பை நீக்கம் பெண்களுக்கு செய்யப்பட்டிருப்பதாகவும், இவற்றை தனியார் மருத்துவமனைகள் செய்திருப்பதாகவும், அரசுகளின் காப்பீட்டு திட்ட நிதியை பெறுவதற்காக தனியார் மருத்துவமனைகள் தேவையில்லாமல் கர்ப்பபையை அகற்றியிருப்பதாகவும் தெரிவித்தார்.

2022-ல் தேவையற்ற கருப்பை நீக்கத்தை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது. கடந்த மாதம் வழக்கு தொடர்பாக உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், 3 மாதங்களில் மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எனவும், மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக கருப்பை அகற்றத்தை கண்காணிப்பதாக தெரிவித்திருக்கும் மத்திய சுகாதாரத்துறை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து கருப்பை அகற்றம் குறித்த தகவல்களையும் பகிர வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது

  • "பெண்களுக்கு தேவையின்றி கருப்பை நீக்கம்"
  • பீகார், சத்தீஷ்கர், ராஜஸ்தானில்
  • பெண்களுக்கு தேவையின்றி கருப்பை
  • நீக்கம் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு
  • "ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா,
  • அரசு சுகாதார திட்டங்களில் கருப்பை நீக்கம்"
  • "கருப்பை நீக்கத்தை தனியார்
  • மருத்துவமனைகள் செய்துள்ளன"
  • "காப்பீட்டு நிதியை பெற தனியார்
  • மருத்துவமனைகள் கருப்பை நீக்க
  • சிகிச்சையை செய்துள்ளன"

Next Story

மேலும் செய்திகள்