"அரிக்கொம்பன் மெலிந்து காணப்படுகிறதா?" - வனத்துறை வெளியிட்ட வீடியோ

தேனி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானை, கடந்த ஜுன் 5ம் தேதி கோதையார் வனப்பகுதியில் விடப்பட்டது. அரிக்கொம்பன் யானை உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டுவதாக தகவல்கள் வெளியாகின. அரிசியை சாப்பிட்டதால் உடல் உப்பிய நிலையில் இருந்த அரிக்கொம்பன், தற்போது வனப்பகுதியில் உள்ள புற்களை சாப்பிடுவதால் மெலிந்த தோற்றத்திற்கு மாறியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ரேடார் கருவி மூலம் அரிக்கொம்பனை வனத்துறையினர் கண்காணிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அம்பை, களக்காடு என இரு கோட்டத்தை சேர்ந்த வனத்துறையினரும் தொடர்ந்து அரிக்கொம்பனை கண்காணித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com