தமிழகத்தில் நுழைகிறதா 'அமுல்' நிறுவனம்? - அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

x

கர்நாடகாவில் அமுலா...? நந்தினியா...? என எழுந்த பஞ்சாயத்து தமிழகத்தில் ஆவினா...? அமுலா...? என மாறியிருக்கிறது..

கர்நாடகாவில் பெங்களூருவில் பால் விற்பனை என அமுல் அறிவித்தது பிரச்சினை ஆன நிலையில், தமிழகத்தில் பால் கொள்முதலில் அமுல் களமிறங்கியதால் பிரச்சினையாகி யிருக்கிறது.நாட்டின் மிகப்பெரிய கூட்டுறவான அமுலின் ஆண்டு வருவாய் 72 ஆயிரம் கோடியாக உள்ளது. நாளொன்றுக்கு 2 கோடியே 70 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்யும் அமுல் இதை 3 கோடியே 10 லட்சம் லிட்டராக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

அதற்கான பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறது. தமிழகத்திலும் பால் கொள்முதலை தொடங்கியிருக்கிறது அமுல் நிறுவனம். திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பால் கொள்முதலை தொடங்குவதாக அமுல் அறிவித்துள்ளது. சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்த சூழலில் இப்போது வேலூரில் தினசரி 3 ஆயிரம் லிட்டர் பாலை அமுல் கொள்முதல் செய்வதாகவும் அதனை 30 ஆயிரம் லிட்டராக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது என தெரிகிறது.அமுல் நிறுவனம் தமிழக எல்லையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திராவின் ஸ்ரீ சிட்டியில் மற்றொரு பால் பதப்படுத்தும் தொழிற்சாலையை அமைத்து வருகிறது. எனவே ஈரோடு, திருவண்ணாமலை, சேலம் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலிருந்தும் பாலை கொள்முதல் செய்ய அமுல் திட்டமிட்டுள்ளது.

அமுல் பால் கொள்முதல் அதிகரிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகளுக்கு ஆவினைவிட லிட்டருக்கு 2 ரூபாய் கூடுதலாக அமுல் கொடுக்கிறது எனவும் பால் எடுக்கும் முகவருக்கு லிட்டருக்கு 50 பைசா கமிஷன் கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் விவசாயிகள் அமுலுக்கு பாலை கொடுப்பது அதிகமாகும், ஆவின் பாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இந்த சூழலில் தமிழகத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்த கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அமுலின் எல்லை தாண்டிய கொள்முதல் வெண்மை புரட்சி கொள்கைக்கு எதிராக அமையும் எனவும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும் எனவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்