கைதாகிறாரா நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ்?

x

கைதாகிறாரா நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ்?


ரான்பேக்ஸி என்ற நிறுவன தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ்க்கு தொடர்பு இருந்ததாக சந்தேகித்த அமலாக்கத்துறை அவரிடம் பலமுறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியதில், சுகேஷிடம் இருந்து பல கோடி மதிப்பில் பரிசுப்பொருட்கள் பெற்றது தெரியவந்தது. இந்த நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் புதன்கிழமை அன்று தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்னான்டஸ் பெயரையும் அமலாக்கத்துறை சேர்த்துள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டுள்ள ஜாக்குலின் பெர்னான்டஸ், தான் சக்தி வாய்ந்தவள் எனவும், எல்லாம் சரியாகிவிடும், நினைத்த இலக்கை அடைவேன் என்றும்பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்