பேட்மேன்,ஸ்பைடர்மேனையே தூக்கி சாப்பிடும் மாஸான சூப்பர்ஹீரோ "இரும்புக்கை மாயாவி" - லோகேஷின் கனவு படம்.. இப்படியொரு அற்புத கதையா? விலகிய 10 ஆண்டு மர்மம்..!

x

தனது ட்ரீம் ப்ராஜெக்ட் 'இரும்புக்கை மாயாவி' என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ள நிலையில், ஒரு காலத்தில் தமிழில் அதிகம் கொண்டாடப்பட்ட மாயாவி கதை பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

இன்று சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என துடிக்கும் இளைஞர்களுக்கு பெரும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார் 'விக்ரம்' படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில், தனது ட்ரீம் ப்ராஜெக்ட் குறித்து மனம் திறந்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 'இரும்புக் கை மாயாவி' தான் தனது கனவு படம் என தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக அவர் எழுதிய கதையும் இது தானாம்....

நடிகர் சூர்யாவுடன் சூப்பர் ஹீரோ கதையான 'இரும்புக் கை மாயாவி' படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுக்க முயற்சித்ததும்... பிறகு அந்த முயற்சி கைவிடப்பட்டதும் தனி கதை.

இப்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மட்டுமல்ல.... இதற்கு முன்பும் பல நடிகர்கள் 'இரும்புக் கை மாயாவி' படத்தை எடுக்க ஆர்வம் காட்டியதுண்டு.

இன்னும் சொல்லப்போனால் இயக்குனர்களான பிரபு சாலமன், மிஷ்கின், ஏ.ஆர்.முருகதாஸ், சிம்புதேவன், பொன்வண்ணன் போன்ற பலரது சிறுவயது இன்ஸ்பிரேஷன்... 'இந்த இரும்புக் கை மாயாவி' தான்.

ஆம்... ஒரு காலத்தில் தமிழ் காமிக்ஸ் உலகில் கலக்கிய புத்தகம் தான் இந்த 'இரும்புக் கை மாயாவி'.... அதுவும்

70, 80களில் 'இரும்புக் கை மாயாவி குறித்து கேள்விப்படாத வர்கள்' மிகவும் அரிது என்கின்ற அளவிற்கு விற்பனையில் சக்கை போடு போட்டது... 'இரும்புக் கை மாயாவி'.

'இரும்புக் கை மாயாவி' என்பது ஆங்கிலத்தில் கடந்த 1962 ஆம் ஆண்டு வெளியான 'The Steel Claw' காமிக்ஸின் தமிழ் மொழிபெயர்ப்பு. ஆனால் ஆங்கிலத்தை விட தமிழிலேயே ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

கதைப்படி, ஒரு விஞ்ஞானியின் ஆய்வகத்தில் வேலை செய்யும் ஹீரோ.. திடீரென தனக்கு கிடைத்த அற்புத சக்தியை தவறாக பயன்படுத்தி கொள்ளைக்காரனாக மாறி.... பிறகு திருந்தி ஜேம்ஸ் பாண்ட் போல் உளவாளியாக பணிபுரியும் அற்புத சாகசங்கள் தான் இந்த சூப்பர் ஹீரோ கதையின் சாராம்சம்.

விபத்தில் தனது வலது கையை இழக்கும் ஹீரோ கிராண்டலுக்கு.... செயற்கை கை பொருத்தப்பட... ஒரு நாள் திடீரென அவர் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்கிறது. அப்போது உடல் முழுவதும் மாயமாக மறைந்து உலோக கைமட்டும் பிறர் கண்களுக்கு தெரியும் அற்புத சக்தி ஹீரோவுக்கு கிடைக்கிறது

கூடவே தனது இரும்பு கையின் மூலம் மின்சாரத்தை பாய்ச்சுவது... ஆள்காட்டி விரலில் இருந்து மினி துப்பாக்கி... நடு விரலில் இருந்து வெளிவரும் மயக்க வாயு.... சுண்டு விரலில் ரேடியோ சிக்னல்களை அனுப்பும் வசதி... இன்னொரு விரலில் இருந்து வெளிவரும் கத்தி... உள்ளங்கையில் மினி ரேடியோ... என பல அற்புத சக்திகள் கொண்ட உளவாளியாக மாயாவியின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இப்படி அன்று மட்டுமல்ல... இன்றும் காமிக்ஸ் உலகில் பலராலும் கொண்டாடப்படும் 'இரும்புக் கை மாயாவி' என்ற சூப்பர் ஹீரோ கதையை தான் தனது ட்ரீம் ப்ராஜெக்ட் என குறிப்பிட்டு இருக்கிறார், இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.


Next Story

மேலும் செய்திகள்