விபத்தின் போது 110 கி.மீ வேகத்தில் பறந்த இர்ஃபானின் சொகுசு கார் - காருக்குள்ளே இருந்த இர்ஃபான்

x

செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகரில் பிரபல யூடியூபர் இர்ஃபானின் சொகுசு கார் மோதி பத்மாவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், காரை ஓட்டி வந்த இர்ஃபானின் உறவினர் அசாரூதின் மீது போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில், விபத்தின் போது இர்ஃபானும் அவரும் மனைவியும் காரில் இருந்தது தெரியவந்துள்ளது. மனைவியின் சொந்த ஊரான தஞ்சாவூரில் இருந்து திரும்பும் போது விபத்து ஏற்பட்டதாகவும், காரினுள் இர்ஃபான் அவரது மனைவி உட்பட 6 பேர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இர்ஃபான் மீது வழக்குபதிவு எதுவும் செய்யப்படாத நிலையில், விபத்தை ஏற்படுத்திய அவரது உறவினர் அசாரூதின் காவல்நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், விசாரணையில், விபத்தின் போது கார் 110 கிலோ மீட்ட வேகத்தில் சென்றதும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்