"எப்பவாச்சுனா பராவல்ல.. எப்பவுமேவா?" - அழாத குறையாக புலம்பி தீர்த்த இர்ஃபான்

x

பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது வீட்டில் தொடர்ந்து மின்சாரம் கட் ஆவதாக டிவிட்டரில் புலம்பிய நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் பதிலளித்துள்ளது.

பல்வேறு உணவகங்களுக்கு சென்று அந்த உணவகத்தில் இருக்கும் உணவுகளை ருசித்து அதனை வீடியோவாக யூடியூபில் வெளியிட்டு வருபவர் இர்ஃபான். இவருக்கு யூடியூபில் லட்சக்கணக்கில் ஃபாலோயர்ஸ் உள்ளனர். இவர், தற்போது சினிமா பிரபலங்களையும், அரசியல்வாதிகளையும் பேட்டி எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் பேட்டி எடுத்து தனது யூடியூபில் பகிர்ந்துள்ளார். இதே போன்று, அண்மையில் அவரது திருமணம் முடிந்த பின்னர், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு குடும்பத்தோடு சென்று அவருடன் உரையாடியுள்ளார். அந்த வீடியோக்களையும் யூடியூபில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்