"ஊராட்சி நலத்திட்ட பணிகளில் முறைகேடு" - 4 பேர் மீது மாவட்ட ஆட்சியர் அதிரடி

x

சோழவாண்டியபுரம் கிராமத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம், இதர நலத்திட்ட பணிகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. ஆட்சியர் உத்தரவின் பேரின், மாவட்ட திட்ட இயக்குனர் மணி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி புகாரை உறுதி செய்தனர்.

இதை தொடர்ந்து, சோழவாண்டியபுரம் ஊராட்சி செயலர் பெருமாள், பணி மேற்பார்வையாளர்கள் கலைவாணி, கோவிந்தசாமி, கண்ணன் ஆகிய 4 பேரை பணி இடைநீக்கம் செய்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஊராட்சி செலவினங்களை செய்வதற்கான அங்கீகாரத்தை தலைவர் மற்றும் துணைத் தலைவரிடமிருந்து தற்காலிகமாக தடை செய்வதாகவும் அறிவித்துள்ளார். வட்டாட்சியர் தலைமையில் ஊராட்சி மன்ற கூட்டத்தினை கூட்டி தலைவர் மற்றும் துணைத் தலைவரை பணி நீக்கம் செய்யவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்