அயர்லாந்தை பந்தாடிய இலங்கை... 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

x

டி20 உலகக்கோப்பை சூப்பர்-12 சுற்றில் அயர்லாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றது.

குரூப்-ஒன் பிரிவில் ஹோபர்ட் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து, இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்தது. அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டர் அதிகபட்சமாக 45 ரன்கள் அடித்தார். கட்டுக்கோப்பாக பந்துவீசிய இலங்கை சுழற்பந்துவீச்சாளர்கள் ஹசரங்காவும் தீட்சனாவும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


Next Story

மேலும் செய்திகள்